இந்நாவல் கோடைக்காலம் உருவாக்கிய காதல் கதை ஒன்றைச் சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது. ஒரு சமயம் தனிமை என் வீடாக இருந்தது. இன்று நான் அதன் வீடாகிவிட்டேன் என்கிறது கமலாதாஸின் கவிதை வரி. அதுவே இந்நாவலுக்குப் பொருத்தமான உதாரணம்.
உலகின் நிரந்தர மகிழ்ச்சியாக இருப்பது காதலே. எந்தத் தேசத்திலும் எந்தச் சூழலிலும் காதல் மனிதர்களைச் சந்தோஷப்படுத்தவே செய்கிறது. காதலுற்றவர்கள் கனவு காணுகிறார்கள். எல்லாக் கனவுகளும் நனவாகி விடுவதில்லை. எல்லாத் தத்துவங்களையும் வழிகாட்டுதல்களையும் தோற்கடித்து வாழ்க்கை தன் போக்கில் சுழித்தபடியே சென்று கொண்டிருக்கும் என்பதே உண்மை, அதுவே நாவலின் மையமாகவும் விளங்குகிறது.
No product review yet. Be the first to review this product.