யதார்த்தம், புனைவு மற்றும் மிகுபுனைவு ஆகிய மூன்று தளங்களையும் ஓரிதழ்ப்பூவின் கதைவெளி உள்ளடக்கி
இருக்கிறது. இக்கதாபாத்திரங்கள் மிகவும் தனித்தன்மையான சிக்கல்களைக் கொண்டிருக்கிறார்கள். இந் நாவல்
உருவாக்கும் மாயவெளியில் வாசகர்கள் தங்களை முற்றிலும் கரைத்துக் கொள்ள முடியும்.
வாசிக்கும் போதே தரையில் கால் நழுவும் அனுபவத்தைத் தரக் கூடிய அய்யனார் விஸ்வநாத்தின் எழுத்து,
ஒவ்வொருவரின் நிகழையும் பலவந்தமாய் பிடுங்கி கனவில் எறிகிறது. இப் புனைவின் புதிர் வெளியெங்கிலும்
ஓராயிரம் இதழ்கள் கொண்டப் பூக்கள் ஒரே நேரத்தில் பூக்க ஆரம்பிக்கின்றன. வாசகராய் உள்நுழையும் எவரும்
இக் கனவு வெளியில் தொலையாமல் மீளும் சாத்தியங்கள் மிகக் குறைவு.
***
திருவண்ணாமலையை சொந்த ஊராகக் கொண்ட அய்யனார் விஸ்வநாத்தின் ஆறாவது புத்தகம் இது. கவிதை
சிறுகதை நாவல் எனப் புனைவுத் தளத்திலும் சினிமாக் கட்டுரைகள் என அ-புனைவுத் தளத்திலும் இயங்குபவர்.
கடந்த பத்து வருடங்களாக துபாயில் வசிக்கிறார். மலையாள சினிமா மற்றும் உலகளாவிய மாற்று
சினிமாக்களில் இவரது பங்களிப்பு இருக்கிறது. ஓரிதழ்ப்பூவை திருவண்ணாமலை ட்ரிலாஜியின் இரண்டாவது
நாவல் என்கிறார். முதல் நாவலான இருபது வெள்ளைக்காரர்கள் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றது.
ஒரு தசாம்சத்திற்கும் மேலாக இணையத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர். திரளான இணைய வாசகர்களைப்
பெற்றிருக்கிறார்.
No product review yet. Be the first to review this product.