தமிழில் நாவல் இலக்கியம் செழித்து வளார்ந்துள்ளது.நாவல் திரனாய்வும் வளர்ச்சி அடைந்துள்ளது.இக்கால நாவல்கள் சிலவற்றை முன்வைத்து நாவல் இலக்கியத்தின் செல்நெறிகளைச் சுட்டும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.சமகால வாழ்வின் விளைச்சலாக,வாழ்க்கை அக்கறையாக,நம்பிக்கைத் திறவுகோலாக நாவல் இலக்கியம் திகழ்வதை இத்திறனாய்வுகள் வெளிப்படுத்துகின்றன.படைப்பூக்கத்திற்கும்,திறனாய்வுக் கற்கைக்கும் இந்நூல் தூண்டுகோலாகத் திகழும் திறன் படைத்தது.
இரா.காமராசு படைப்பிலக்கியத்திலும்,திறனாய்விலும் கால்பதித்து நிற்பவர்.பல நூல்களின் ஆசிரியர்.தற்போது தஞ்சாவூர்,தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையில் பணியாற்றி வருகின்றார்.