சித்த மருத்துவம் பழந்தமிழரின் அறிவியல்,நலவாழ்வு நாகரீகத்திற்கான தேடலில் விளைந்த அனுபவ உண்மைகளின் அடிப்படையில் உருவான அறிவியல் உடலும் மனமும் ஒருங்கே நலம் பெற்றால்தான் நலவாழ்வு சாத்தியம் என்ற இன்றைய வாதத்தின் நேற்றைய விளக்கம் சித்த மருத்துவம்.இன்னமும் இன்றைய அறிவியலின் ஆய்வுக் கண்களுக்கு முழுவதுமாக புலப்படாமல்,ஆனால் முழுப் பயனளிக்கும் முறை என்றும் இதனைக் கூறலாம்.