உற்றறிந்த புலங்களைத் தாண்டி ஒரு புதிய வெளிக்குள் இசையின் கவிதைகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆயினும், அவருடைய கவியுலகின் என்பும் தசையுமான எளிமையும் பகடியும் இந்தக் கவிதைகளிலும் உண்டு. வழக்கமாகத் தகிக்கும் குருதியிலிருந்து தன் கவித்துவத்தை அடையும் இசை இம்முறை கண்ணீரின் விலா எலும்பிலிருந்தும் அதைப் பெற்றிருக்கிறார். கவிதைகள் பலவற்றுள் உள்ளுறைந்திருக்கும் பிளவுண்ட தன்னிலை அவர் கவிதைக்குள் கூடியிருக்கும் ஒரு புதிய பொருள். கவிதை சாத்தியப்படுத்தும் தரிசனத்தின் சாட்சியாக இத்தொகுப்பில் ஒரு ‘மே ஃப்ளவர்’ மரத்தைப் படைத்திருக்கிறார் இசை. அதன் கிளைகளையும் மலர்களையும் பல கவிதைகளில் நாம் காணலாம்.
- குணா கந்தசாமி
No product review yet. Be the first to review this product.