முத்தமிடுகையில்
பன்னிரெண்டு வோல்ட் மின்சாரம் நரம்பெல்லாம் ஊடுருவி, பளிச்சென
விளக்கெறிந்தது போல் ஆகுமா? ஷர்மி முத்தமிட்டால் ஆகும். அப்படி ஒரு
முத்தத்தை கொடுத்துவிட்டு “எனக்காக இந்தச் சின்னத் திருட்டைக்கூட செய்ய
மாட்டாயா?” என்று மடியின் மேல் உட்கார்ந்தபடி கேட்பவளுக்கு மாட்டேன் என்று
நீங்கள் சொல்வீர்கள் என்றால்.. நீங்கள் பெரிய ஆள் தான் சார். ஆனால் நான்
சாதாரணன். “உனக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன்”
என்று ஷாக்கடித்த கிக்கிலிருந்து வெளியே வராமல் சொன்னதன் விளைவுதான்
சென்னையின் மிக முக்கியமான, பெரும் பணக்காரர்களுக்கான வைரம் விற்கும் கடை
வாசலில் நிற்கிறேன்.
ஷர்மியை நான் முதன் முதலில் பார்த்தது,
ஈசிஆரில் நடந்த ஒரு ப்ரைவேட் பார்ட்டியில் தான் அது பெண்கள் மட்டுமே கலந்து
கொள்ளும் மிக சுவாரஸ்யமான பார்ட்டி. எங்களைப் போன்றவர்களைத் தவிர மற்ற
ஆண்களுக்கு அனுமதி கிடையாது. நாங்கள் சென்னையில் பிரபல கால்பாய்
நெட்வொர்க்கிலிருந்து அனுப்பப்பட்டவர்கள். நான், ராகுல், கந்தசாமி ஆனால்
அவனை இம்மாதிரி அசைன்மெண்டுகளின் போது ராகேஷ் என்று தான் அழைக்க வேண்டும்
என்று சொல்லியிருக்கிறான்.
'நான் ஷர்மி வைரம்' நாவலில் இருந்து..
No product review yet. Be the first to review this product.