மகாத்மா என்ற பெருமரத்தின் நிழலில் இந்தியா தன்னை விடுவித்துக் கொண்டது. அவர் தன்னை தேசத்துக்காக சமர்ப்பித்துக் கொண்டவர். பொதுப்பணிகளே கடமை என்று வாழ்ந்தவர். ஆனால் அவருக்குத் திருமணமாகியிருந்தது. நான்கு மகன்களைப் பெற்றிருந்தார். அவர் தனி வாழ்க்கையையும் பொது வாழ்க்கையையும் ஒன்றாக்கிக் கொண்டவர்.
அந்த தனி வாழ்க்கையின் துணையாக அவரிடம் வந்து சேர்ந்தவர்தான் கஸ்துார். போர்பந்தரைச் சேர்ந்த, வசதியான வியாபாரியின் மகளாக, பதினெட்டு அறைகள் கொண்ட மாடி வீட்டில் பிறந்து வளர்ந்தவர். தாய்மொழியைத் தவிர வேறேதும் அறியாதவர். கஸ்துார் ஒரு கூரையின் கீழ் கணவர், குழந்தைகள் என்று வாழ்ந்தவரில்லை. ஆசிரமமே வீடு என்றாகிறது. மகன்களையும் மற்றெல்லாரையும் சரிசமமாகப் பார்க்க வேண்டியிருந்தது.
சாதிய நம்பிக்கை கொண்ட அவர், தாழ்த்தப் பட்டோரின் மலச்சட்டியைத் துாய்மைப்படுத்த வேண்டியிருந்தது. தென்னாப் பிரிக்காவிலும் இந்தியாவிலும் சிறைவாசம் அனுபவிக்கிறார். உடல் தளர்ந்தாலும் உள்ளம் இரும்பென்றாகிறது. அவரின் இறுதிக் காலம் கூட ஆகாகான் மாளிகை சிறைவாசத்தின்போதுதான் நடக்கிறது. அவரின் இத்தனை உயர் இயல்புகளும் தனிப்பட்ட தியாகமும் கணவரின் ஒளிக்குள் சென்று மறைந்து விடுகிறதோ என்ற பதைப்பை இந்த நூல் நீக்குகிறது.
கன்னடத்தில், டாக்டர். எச்.எஸ்.அனுபமா அவர்களால் எழுதப்பட்ட கஸ்தூரின் உண்மை வாழ்க்கைப் பதிவு என்றாலும் எழுத்தாளரின் காவியமனம் உள்ளே நுழைந்து இந்நூலைக் காவியமாக்குகிறது. அதை அப்படியே நமக்கு மொழியாக்கம் செய்து அளித்திருக்கிறார் திரு. கே.நல்லதம்பி அவர்கள்.
- கலைச்செல்வி
எழுத்தாளர்
No product review yet. Be the first to review this product.