இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் திரு. வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் 100ஆவது நூல் இது. சுற்றுலாத்துறையின் ஆணையாளராகவும், செயலராகவும் இருந்து சுற்றுலாத்துறையின் பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு பல நற்செயல்கள் புரிந்தவர். சுற்றுலாவைப் பற்றி நல்ல புரிதல் உள்ளவர். மூளைக்குள் கடின சுற்றுலா நடத்தி ‘மூளைக்குள் சுற்றுலா’ நூல் வடித்துள்ளார். நூலாசிரியரின் ‘இலக்கியத்தில் மேலாண்மை’ நூல் படித்துவிட்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திருமலை அவர்கள் குறிப்பிட்டு இருந்தார். “இறையன்பு அவர்களே நினைத்தாலும் இதுபோன்ற நூலை எழுத முடியாது” என்று. இந் நூலிற்கும் அது பொருந்தும். அவரே நினைத்தாலும் இதுபோன்று இன்னொரு நூல் எழுத முடியாது. அவ்வளவு சிறப்பு. இந்த நூலில் மூளையின் செயல்பாடுகள் படித்த போது, வியந்து போனேன். கையளவு உள்ள மூளை மலையளவு செயல்புரிகின்ற விதம் கண்டு வியந்து போனேன். இந்த நூலில் மூளை மட்டுமல்ல நாடி, நரம்பு, எலும்பு, பல், இனாமல் என உடல் உறுப்புகள் அனைத்தையும் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி உள்ளார்.
No product review yet. Be the first to review this product.