தஞ்சாவூர் மண்ணில் பல்வேறுபட்ட கலாசாரங்களில் பிராமணர் கள்ளர்,இஸ்லாமியர் என மூன்று கலாசார வாழ்வை துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார் ப்ரகாஷ்..
ப்ரகாஷின் கதைகளில் பிரதானமாகக் காண்பது பெண்கள்,பெண்களின் வாழ்க்கை,பெண்கள் மீதான அடக்குமுறை மற்றும் பெண்களின் அடக்கப்பட்ட காமம்.
ப்ரகாஷின் படைப்புகள்.அவருடைய அத்தனை கதைகளும் பெண்களைப் பற்றித்தான் பேசுகின்றன.அதுவும் வெளியில் ஒரு ஆணின் பார்வையிலிருந்து அல்ல;ஒவ்வொரு கதையின் உள்ளேயிருந்து கேட்பதெல்லாம் பெண்ணின் குரல்தாம்.