ஐஸ்லாந்து நாட்டின் கடலோரக் கிராமம் ஒன்றில் தற்செயலாகப் பிறக்க நேர்ந்த,தாய் தந்தையரை அறியாத அல்ஃப்க்ரைமுரின் இளமைக்கால மனப்பதிவுகளினூடாக விரிகிறது இந்த நாவல்.அவன் வளரும் ப்ரெக்குகாட் இல்லம் விசித்திர மனிதர்களீன் வாழ்விடம்.தனது தாத்தாவாக வரித்துக்கொண்ட ப்யோர்னைப் போலவே தானும் ஒரு செம்படவனாக வேண்டும் என்று அல்ஃப்க்ரைமூர் விரும்புகிறான்.ஆனால் வாழ்க்கை அவனுக்கு வேறொன்றை விதித்திருக்கிறது.புகழ்பெற்ற பாடகராக அறியப்படும் கர்தர் ஹோமின் வருகையும் அவருடனான சந்திப்பும் அவனது வாழ்க்கைத் தடத்தை மாற்றுகிறது.முர்றிலும் ஒரு புதிய அத்தியாயத்திற்காக அந்தக் கடற்கரைக் கிராமத்திடமிருந்து விடைபெற்றுச் செல்கிறான் அல்ஃப்க்ரைமுர்.