மீன்கள் துள்ளும் நசி
நவீன வாழ்வானது சிக்கலான மனோபாவ அழுத்தங்களின் மேல் மிக சொகுசாக்கப்பட்டிருக்கிறது. அது எப்போதும் சுருக்கிட்ட கவணை வீசியபடி இருக்கிறது. அதன் இயக்கமும் சுண்டி விடுபட வைப்பதாகவும் மர்மமானதாகவும் கருதப்பட்டாலும் ஒரு கவிஞன் அத்தகைய ஒன்றை கண்ட்டைந்து விடுகிறான். நிலாரசிகன் தனது கவிதைகளின் வழியாகத் தொடர்ந்து இத்தகைய ஊசலாட்டத்தின் அசைவையும் உறைய வைக்க முயல்கிறார்.
நிலாரசிகன், புது எழுத்து