படைப்பின் உயிர்ப்பைக் கண்டறிந்து அதன் நூல்பற்றிச் செல்ல சில வரிகள் வாசித்தாலே போதும். அப்படைப்பின் பிரவாகத்தில் ஆழ்ந்து மன எழுச்சியில் அதன் ஆளுகைக்கு உட்பட்டுவிடுவோம். அப்படி ஈர்க்கிற படைப்புகள் எப்போதாவதுதான் நம்மை வந்தடைகிறது. அதுவும் முதல் தொகுப்பு என்ற வகையில் வாசிக்கக் கிடைக்கிற படைப்புகளில் செய்நேர்த்தியும், சிறந்த எழுத்து நடையும் பார்க்க முடிவது வெகு அபூர்வம்.
சித்துராஜ் கதைகளை வாசிக்கையில் சிறந்த வாசிப்பனுபவம் கிடைக்கிறது. தடங்கலற்ற சீரான எழுத்து நடை, கதை சொல்லும் பாணி, சிறிய சம்பவங்களையும் கதையாக்கும் திறன் இவை சித்துராஜ் எழுத்துகளின் பலம்.
- பொன். வாசுதேவன்