மனித வாழ்க்கைக்கான இருப்பையும் நகர்வையும் பற்றிய நியதிகளை நதிக்கரை நாகரிகம் என்னும் செழிப்பிலிருந்து கவிதையாக்கம் என்னும் வண்டல்
பரப்பிற்குள் இழுத்துச் செல்கிறார் கவி கலாப்ரியா. தன்னுள்ளும் தன் காலத்தில் கவிதை செய்யும் கவிகளுக்குள்ளும் மறைந்து நெளியும் நீரோடைகள்
இருக்கின்றனவா என்ற தேடலின் விளைச்சல்களை விவரிக்கின்றன இந்தக் கட்டுரைகள்...
- அ.ராமசாமி
என்னுடைய கவிதைகள் குறித்த விமர்சனங்களில் பாலுணர்வும் வன்முறையும் தூக்கலாக இருப்பதாகக் கூற்ப்படுவதண்டு. நான் இயல்பான தளத்தில்
சந்தித்த அதிர்ச்சியான அனுபவங்களின் பாசாங்கில்லாத வெளிப்பாடாகவே அவற்றை நினைக்கிறேன். அநேகமான அனுபவங்களின் பின்னால்
பருண்மையான மனிதர்கள் இருக்கிறார்கள்....
- கலாப்ரியா