குட்டி இளவரசன்
அந்த்வான் து செந்த் - எக்சுபெரி
(பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில்: வெ. ஸ்ரீராம், ச. மதனகல்யாணி) • புதிய பதிப்பு 2009
• 118 பக்கங்கள் • ISBN 978-81-85602-94-3
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.
நூலிலிருந்து:
“பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.”
“இதயத்திற்குத்தான் பார்வை உண்டு. முக்கியமானது கண்களுக்குத் தென்படாது.”
“உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது.”
“இந்தப் பாலைவனத்திற்கு அழகு தருவது எங்கோ ஒரு மூலையில் அது கிணற்றை ஒளித்து வைத்திருப்பதுதான்...”
குட்டி இளவரசன், அந்த்வான் து செந்த் - எக்சுபெரி, kutti ilavarasan , Cre-A Publication, க்ரியா பதிப்பகம்