* நிஸார் கப்பானி * லேனா கலாஃப் * தாஹா முஹமது அலி
* ஃபுயாத் ரிஃப்கா* அடோனிஸ் * மாரம் அல் மஸ்ரி
* ஃப்தில் அல் அஸ்ஸாவி
அரபுக் கவிதைகள்
” குரல் என்பது மொழியின் விடியல்” என்ற தலைப்பில் அரபுக் கவிதைகளின் புதிய மொழிபெயர்ப்புத் தொகுதி ஒன்றை நண்பர்
ரவிக்குமார் இப்போது நமக்குத் தருகிறார். தமிழ் இலக்கியச் சூழலில் அறிமுகம் தேவை இல்லாத ஆளுமை அவருடையது. கவிஞராக, சிறுகதை
ஆசிரியராக, இலக்கிய, சமூக, அரசியல் விமர்சகராக, மொழிபெயர்ப்பாளராக, மனித உரிமைச் செயற்பாட்டாளராக, இறுதியில் ஒரு
அரசியல்வாதியாகத் தன் பன்முக ஆளுமையை நிலைநிறுத்திக் கொண்டவர் அவர்.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள அடோனிஸ், நிசார் கப்பானி தவிர்ந்த ஏனைய கவிஞர்கள் எனக்குப் புதியவர்கள். தமிழுக்கு அவர்கள்
இப்போதுதான் முதல் முதல் அறிமுகமாகின்றனர் என்று நினைக்கிறேன். அவ்வகையில் இத்தொகுப்பு நமக்கு இன்னும் முக்கியத்துவம் உடையதாகிறது
ரவிக்குமாரின் மொழிபெயர்ப்புகள் ஆங்கில மூலத்துக்கு விசுவாசமாகவும், எளிமையாகவும் அதேவேளை சரளமாகவும் உள்ளன. தான் ஒரு
கைதேர்ந்த மொழிபெயர்ப்பாளரும்தான் என்பதை இத்தொகுப்பின் மூலமும் அவர் நிரூபித்திருக்கிறார். சமூக வேர்களை அறுத்துக் கொண்டு
தனிமனித உணர்வுகளுள் பெரிதும் உள்ளொடுங்கிப்போன இன்றையத் தமிழகக் கவிதைச் சூழலில் இத்தொகுப்பின் வருகை முக்கியமானது