கிறிஸ்தவம் அன்பையும் தாழ்மையையும் போதிக்கும் மதம்.ஆனால்,அது கடந்து வந்த பாதைகள் முழுதும் வன்முறையின் வாசமே அதிகம்.அடக்குமுறைகளில் அடிபட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் உரு புறம்.உள்ளுக்குள்ளேயே கலகம் கொண்டு வன்முறை விளம்பியவர்கள் இன்னொரு புறம் என உள்ளும் புறமும் கிறிஸ்தவம் கடந்து வந்த பாதை நம்ப முடியாத நிகழ்வுகளின் தொகுப்பு.
இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்,அவர் மீது கொண்ட விசுவாசத்தின் மீது கட்டுயெழுப்பப் பட்டது தான் கிறிஸ்தவமதம்.தொடக்கத்தில் ஆன்மிகத்தில் திளைத்து,பின்னர் சட்டங்களில் அடைபட்டு,அரசியலில் தலை நுழைத்து,அடிப்படைப் போதனைகளை நிராகரித்து என பவேறு முகம்காட்டி வந்திருக்கிறது கிறிஸ்தவம்.
ஒவ்வோரு காலகட்டத்திலும் கிறிஸ்தவம் எப்படி இருந்திருக்கிறது,இன்றைக்கு அது எந்த வடிவத்தில் இருக்கிறது போன்றவற்றை இந்த நூல் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது.இயேசுவோடு நடந்த சீடர்கள் முதல் ,உலகின் கடைக்கோடியில் இன்றைக்கு இருக்கும் திருச்சபைகள் வரை ஒரு பரவலாற்றுப் பார்வையை இந்த நூல் நல்குகிறது.
வரலாற்றுப் பதிவுகள் பாரபட்சம் பார்ப்பதில்லை,இந்த நூலும் அதற்கு விதிவிலக்கல்ல!