கிளி எழுபது :
நாட்டுப்புறவியலும் செவ்வியலும் மிகப் புராதானமான புனைவியல்
சகோதரிகள். இருவரும் தனித்தனி ஸ்திரிகள் என்றாலும் ஒருத்தியின் ஆடையை மற்றவள் உடுத்தி விளையாட்டயர்வது சர்வசாதாரணம். ஒருத்தியின் வேஷத்தைக் களைத்தால் மற்றவள் இருப்பாள். கிளி எழுபதில் இவர்களது மாறுவேஷங்களைக் கண்டுமகிழலாம். வட இந்தியாவில் வாய்மொழிக் காமியக் கதைகளாக நிலவிய வந்த இவை 12ஆம் நூற்றாண்டில் தொகுத்து எழுதப்பட்டன.