Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கேளு பாப்பா கேளு

(0)
kelu pappa kelu
Price: 40.00

Weight
80.00 gms

உதயசங்கரின் கவிமனம் குழந்தைகளின் மல உலகத்திற்குள் நுட்பமாக ஊருவிச் சென்றிருக்கிறது.குயிலக்காவிற்காக குட்ட்யாச செடி ஒண்ணு வளர்க்கப்போகிற குட்டிப்பாப்பாவால் நம்பிக்கைகள் மலர்கின்றன.இமயமும் குமரியும் ஒன்றாகவே இரைந்தே செல்லும் புகை வண்டியை விழி மலரப்பார்க்கிறது குழந்தை உள்ளம்.ஏழு கடல் தாண்டி,எல்லா ஊரும் போக உதவும் நல்ல கப்பலின் நூலேணியில் ஏறத்துடிக்கிறது அதன் பிஞ்சு மனம்.

இயற்கை ஒரு இனிய கணவாய் சுழன்று வருகிற நேரம்,மரங்களின் மன்றாடலை,கெஞ்சலைக் கேட்ட்டு மனிதனின் மனசு கொஞ்சமேனும் மாற வேண்டாமா?சட்டச்சடவென்று சிட்டுக்குருவியின் பறத்தலில் லயிக்கிறது பிள்ளை மனம்.

‘வீடு கட்டுவோம்’, ‘சாலை’ இரண்டும் அடுத்தடுத்த பாடல்களாக அமைந்திருக்கின்றன.இனிய பயணம் போகவே இடது பக்கமே போகனும்.என் நிறைகிற பாடலில் எதிர்க்காலக் குடிமக்களாகிய குழந்தைகளுக்கு நுட்பமான ஒரு சேதி சொல்லப்படுகிறது.வலிந்து திணித்து அறிவுரைக்காமல்,மிக இயல்பாகப் பிஞ்சு விரல் பிடித்து நடத்திச் செல்கிற இலாவகமிக்க வரிகளைப் பல இடங்களில் காண முடிகிறது.

 

 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.