வேட்டைகாரனுக்குள் தியானித்திருக்கும் ஜென் துறவி
..............................<wbr style="color: rgb(34, 34, 34); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"></wbr>..............
கவிஞர் ஜெயபாஸ்கரன் இந்த நூலில் லிங்குசாமியின் கவித்துவ உலகின் வெவ்வேறு பரிமாணங்களை வெகு நேர்த்தியாக தொட்டுச் செல்கிறார். லிங்குசாமியின் வரிகள் உருவாக்கும் மன அலைகளை இந்த நூல் நுட்பமாக வரைகிறது.
ஹைகூ என்பது ஒரு இலக்கிய வடிவமல்ல. அது ஒரு வாழ்வியல் தத்துவார்த்த நோக்கு. வாழ்வின் கொண்டாட்டத்திற்கும் பற்றின்மைக்கும் நடுவிலான அபூர்வ நடனம். அது பருவங்களால், காலங்களால், நுண்மையான காட்சிகளால் ஆனது. அந்த காட்சிகளை தன்வயப்படுத்தும் அபூர்வ மனநிலையையே ஒரு ஹைகூவை உருவாக்க முடியும். அப்படி இல்லாததெல்லாம் ’பொய்க்கூ’ என்பார் சுஜாதா.
தமிழில் ஹைகூவிற்கு கறாராக இலக்கணம், கண்ட சுஜாதாவே பாராட்டிய லிங்குசாமியின் ஹைகூ பற்றியும் ஜெயபாஸ்கரன் இந்த நுலில் பேசுகிறார். ஒரு குளத்தில் பரவும் நீர்வளையங்கள் போல லிங்குசாமியின் பல வரிகளுக்குப்பின்னே அலை அலையாக விரியும் அர்த்தங்களை ஜெயபாஸ்கரன் திறக்கும்போது லிங்குசாமியின் சொற்கள் அவை கிளம்பிய இடத்திலிருந்து ஒரு மலைக்கோயிலிருந்து பரவும் மணியோசைபோல பள்ளத்தாக்குகளெங்கும் நெடுந்தொலைவு செல்கிறது.
- மனுஷ்ய புத்திரன்