செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.காரணம் நாம் சரித்திரத்தை வெகுவேகமாக மறப்பவர்கள்.குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கை சித்திரங்களையும்,பெண்கள் வாழ்க்கை போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. அப்படி எளிதாக்கி கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. மனத்தைக் குத்துபவைகளை அவை இல்லாதவை போல பாவனை செய்து கொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க,அவர்களை முட்டி முட்டித் தொல்லை தர,அவர்களின் தடித்து போன தோல்களை கீறிவிட ‘கருக்கு’ தேவைப்படுகிரது.உருவகமாகவும் புத்தகமாகவும்.