19 வது நூற்றாண்டில் உலகத்தில் தோன்றிய பெருஞ்சிந்தனையாளர்ட்களுள் மார்க்ஸ் ஒருவன் என்றும் தான் வாழ்ந்த காலத்தின் மீது அழியாத முத்திரையிட்டுச் சென்றவன் மார்க்ஸைப் போல் வேறோருவரும் கிடையாது என்றும் அறிஞர்கள் அவனுக்கு இறந்தகால மதிப்பை மட்டும் கொடுத்துப் பாராட்டுகிறார்கள்.
ஆனால் அவன் எர்திர்காலத்திற்குறிய புருஷன், எதிர்காலத்தில் மானிட சமுதாயமானது என்னென்ன மாறுதல்களை அடைய போகிறதென்பதை அவன் எடுத்துக்காட்டியிருக்கிறான், தொழில் முதலாழித்துவமானது தன்னையே எப்படி அழித்துக் கொள்ளும் தன்மை பெருகின்ற தென்பதை அவன் ஆதார பூர்வமாக ருஜீப்படுத்திக் காட்டுகிற போது நாம் பிரமிப்படைந்து போகிறோம்.