கலைஞர் என்ற ஆளுமை குறித்து நேர்மறையாக விவாதிப்பதற்கு நிரம்ப விஷயங்கள் உள்ளன. தமிழ் மொழியினால் ஒன்றிணைந்துள்ள தமிழர் வாழ்க்கை குறித்த காத்திரமான பேச்சுகளையும் மதிப்பீடுகளையும் உருவாக்குவதில் கலைஞரின் அரசியல் செயல்பாடுகள் தனித்துவமானவை. வரலாற்றில் தனிநபர் வசிக்கும் பாத்திரம் அல்லது இடம் முக்கியமானது என்ற நிலையில் வரலாறு எப்படி கலைஞர் என்ற ஆளுமையை உருவாக்கியதும் கலைஞர் எப்படி வரலாற்றின் மீது எதிர்வினையாற்றினார் என்பதையும் அறிந்திடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ‘கலைஞர் என்ற அறிவுஜீவி பிறந்தார்’ என்ற கருதுகோளை முன்வைத்து எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம், சமகாலத்தின் சமூக, அரசியல், பண்பாட்டு வரலாற்று ஆவணமாகும்.