தொலைவதை ஏற்பதற்கு, தொலைவதின் ரகசியம் முன்னால் மண்டியிட்டு அதை ஏற்றுக் கடந்து செல்வதற்கு, நான் கற்றுக்கொண்டு வரும் பாடங்களின் தடயங்கள்தான் இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள்.
தொலைந்த நிகழ்வுகள், தொலைந்த கணங்களை என் உடல் மேல் ஏவிக்குதறும் வேளையில் தற்கணங்களை, இவ்வேளையின் காட்சிகளை, நிலப்பரப்புகளை, விலங்குகளை, அழகை நேசத்தை நோக்கிச் செல்ல விழையும் கவிதைகள் இவை. இந்த மூன்று ஆண்டுகளில் கேட்ட இசையும் இப்பொழுதில் காலூன்றி நிற்பதற்கு உதவியுள்ளது.