கடல் பழங்குடிகள் முன்னெப்போதும் சந்தித்திராத நடுக்கத்தை ஒக்கிப் பேரிடரின்போது எதிர்கொண்டன.இப்பீதி கடல் விளைவித்ததல்ல, கரை திட்டமிட்டு நிகழ்த்திய ஓன்று. அபாயமணி ஒலிக்கவேண்டிய அரசு அவர்களைக் கைவிட்டது; மீட்க வரவேண்டிய படைகள் அவர்களின் சடலங்களை சேகரிக்கக்கூட வரவில்லை… இயற்கைப் பேரிடர்களை அடித்தள மக்கள் மீதான உளவியல் போராக முன்னெடுக்கும் குரூர மனநிலை ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அம்மக்களுக்குப் போக்கிடமேது?
No product review yet. Be the first to review this product.