ஷாஜியின் இந்த நூல் நமது காலத்தின் மகத்தான ஆளுமைகளைப் பற்றியும் மறக்க முடியாத மனிதர்களைப் பற்றியும் பேசுகிறது. வரலாற்றை உருவாக்கியவர்களைப் பற்றியும் வரலாற்றில் வாழ்பவர்களைப் பற்றியும் விவரிக்கிறது. மைக்கேல் ஜாக்ஸன், ஏ.ஆர்.ரஹ்மான், ராஜேஷ்கன்னா, பி.பி.ஸ்ரீநிவாஸ், லோஹிததாஸ், சக் பெர்ரி, ஹரிஹரன், மிஷ்கின் போன்ற கலையுலக பிரபலங்களைப் பற்றிய மிக நுட்பமான பார்வைகளை வெளிப்படுத்தும் அதேசமயம் தோல்நோய் மருத்துவர் தம்பையா, அமுல் நிறுவனத்தை உருவாக்கிய டாக்டர் வர்கீஸ் குரியன், தொழில்நுட்ப புரட்சியாளர் ஸ்டீவ் ஜோப்ஸ் போன்றோரைப் பற்றிய அறியப்படாத சித்திரங்களையும் இந்த நூல் வழங்குகிறது. இசை குறித்த ஆழமான பார்வைகள், சினிமா குறித்த நுட்பமான விமர்சனங்கள், சமூகம்-வாழ்க்கை குறித்த புதிய கோணத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் என மிகப் பரந்த தளத்தில் விரியும் இந்த நூல் வாழ்வையும் கலையையும் பற்றிய பல புதிய தரிசனங்களை அளிக்கிறது. ஷாஜியின் தேர்ந்த கவித்துவமான நடையும் கூர்ந்த நோக்கும் இந்த நூலை ஒரு புனைகதையைவிடவும்
சுவாரசியமான வாசிப்பின்பத்திற்கு உரியதாக்குகிறது.