2009 இன அழித்தொழிப்பிற்குப் பின் இலங்கை அரசு சர்வதேச அளவில் மிகக் கொடூரமான ராணுவ வல்லாதிக்க அரசாக செயல்பட்டு வருகிறது. சர்வதேச சமூகத்தின் கண்டனங்களைப் புறக்கணித்து தனது இனவாத ஒடுக்குமுறைகளை பௌத்த சிங்களப் பேரினவாத அரசு எவ்வாறு முன்னெடுத்து வருகிறது என்பதை இந்த நூல் ஆழமாக முன்வைக்கிறது. நேரில் சென்று கண்ட அனுபவங்களின் பின்னணியில் இன்றைய இனங்கையைப் பேசும் இக் கட்டுரைகள் ஈழத் தமிழ் இதழ்களில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றவை.மூன்றாவது முறையாக இலங்கை சென்றபோது கூட்டங்களில் பேசக்கூடாது என அ.மார்க்ஸுக்குத் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.