அவள் தன்னுடைய துயரத்தின் சாயல் மகள் மீது படிவதை ஒருபோதும் விரும்புவதில்லை. அவள் தேடிக் கண்டடையும் ஒவ்வொன்றும் மகளின் விருப்பங்களைச் சாத்தியப்படுத்தவே. அவளின் உள்ளிருந்து தெறித்துப் பரவிய முந்தைய பருவத்தின் வெளிச்சத்தை புதியதொரு நிறத்தில் மகளிடம் உணர்த்திவிட அவளுக்குப் பெரு விருப்பம். வேறொரு தோற்றத்தில் தன்னை வரைந்தது என உறங்குகிற மகளின் கையை விலக்கி களங்கமற்ற கதகதப்பை உடன் எடுத்து, பணியிடம் கிளம்புகிறாள்.
அவளுக்குள் நிரம்பியிருக்கிறது
அவளுடைய தாயின் தாயின் தாயின் காம்பு!
No product review yet. Be the first to review this product.