இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்
மோட்சம் மற்றும் அவித்யை கர்மம் மற்றும் யோகம் ஆகிய கருத்துக்கள் இந்தியத் தத்துவத்தின் தலையாய முக்கியத்துவத்திற்கான ஆதாரங்களாகும் என்று நம்மிடம் சொல்வதன் மூலம் தாங்கள் தனிச்சிறப்பான பெருமையுணர்வை நமது ஆசிரியர்கள் அனுபவித்து வந்த சூழலில் வளர்ந்தவர்கள் நாம். இந்தக் கருத்துக்கள் எந்த அளவுக்குப் புனிதமானவையாகக் கருதப்பட்டன என்பது குறித்து நமக்கு மாயை எதுவும் கிடையாது.