பண்பாடுகளுக்கு இடையில் ஒப்பியல் ஆய்வுகளுக்கான மிகச் சிறந்த தளமாக இலங்கை-இந்தியப் புலங்கள் விளங்குகின்றன.இந்த வகையில் இவ்விரு புலங்களையும் சேர்ந்த புலமையாளர்கள் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் முனைவர் பக்தவத்சல பாரதி ஆகியோரின் ஆய்வுத் தொகுப்பே இந்நூல்.
சமயமும் சமூக கட்டமைப்பும் இந்த ஆய்வு நூலில் குவிமையங்கள்.பருநிலையிலும் நுண்நிலையிலும் தெற்காசியச் சமூகங்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும்,நிர்ணயிக்கும் சமூக மானிடவியல் காரணிகளை இவ்வாய்வுகள் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன;சமூக-மானிடவியல் துறையின் தேடல்களுக்கான திசையினை இனங்காட்டி நிற்கின்றன.
தமிழை அறிவியல் மொழியாக்குவதிலும் தமிழில் மானிடவியலை எழுதும் காலப்பணியிலும் ஒரு மைல்கல்லாக இந்நூலின் வரவு அமைகிறது.