ஹிந்துமதம் - ஓர் அறிமுகத் தெளிவு ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன்.
ஹிந்து மதத்தின் தத்துவக் கருத்துகள் அனைத்தையும் ஒருங்கே அறிவதற்குரிய சான்று நூல்கள் மூன்று. அவை உபநிஷதங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீ ப்ருஹ்ம சூத்திரம்.
ஹிந்து மதத்திற்கு வேதாந்தம், ஆகமம் ஆகிய இரண்டும் இரண்டு கண்களாகத் திகழ்கின்றன.
வேதாந்த உண்மைகள் மாறாதன; ஸ்மிருதிகள் என்னும் அறநூல்கள் தர்ம சாத்திரங்கள் எல்லாம் மாறக்கூடியன.
வாழ்வில் எந்தப் பகுதியையும் புனிதமற்றது என்று ஒரு நாளும் கனவிலும் கருதாதது ஹிந்து மதம். முழு பிரபஞ்ச இயக்கத்தையே தர்மத்தின் கேந்திரமாகப் பார்க்கும் பார்வை ஹிந்து மதத்தினுடையது.
நயனம் என்றால் அழைத்துச் செல்லுதல், உப என்றால் அருகில் என்று பொருள். உபநயனம் என்றால் இளம் தலைமுறைகளை வழிவழி மரபார்ந்த செல்வங்களுக்கு அருகில் அழைத்துச் செல்லுதல்.
யக்ஞம், தவம், தாநம் ஆகிய இந்த மூன்றும் ஹிந்து மதத்தின் உள்ளமைப்பின் குருத்து போன்ற கருத்துகள்.