தன் வாழ்வில் குறுக்கிட்ட மனிதர்களையும், அனுபவங்-களையும் அதன் வீர்யம் துளிக்கூடக் குறையாமல் க.சீ. சிவகுமார் சொல்லிவிடுகிறார். எல்லா பாத்திரங்களோடும் அவரும் கூடவே வலம் வருகிறார். அல்லது எட்ட நின்று பார்வையாளராக அவர்களைப் படம் பிடித்து நமக்குக் காட்டுகிறார்.
இவை கட்டுரைகளா, சிறுகதைகளா? புனைவா, உண்மையில் நடந்த நிகழ்வுகளா? வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இந்தக் கேள்விகள் எழுவதை மறுக்க முடியாது. குங்குமத்தில் தொடராக வந்தபோது வாசகர்களின் பேராதரவைப் பெற்ற ‘குண சித்தர்கள்’ இப்போது நூல் வடிவில்.