மனிதனின் எண்ணங்களும் அனுபவங்களும் வரையறைக்குட்பட்டது.அவனது எல்லைக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்ட எத்தனையோ நிகழ்வுகளும் உயிர்களும்,வாழ்க்கைகளும் இந்த உலகில் சாத்தியம் என்று அர்ஜுனனுக்குப் புலப்படுத்திய நவகுஞ்சரம்,எனது தோட்டத்தில் மிகச்சமீபத்தில் வந்து சேர்ந்திருக்கும் அழகிய ஓருயிர்.