ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்கிறது. ஜெயசிம்மன் (மேலைச் சாளுக்கிய மன்னன்) கீழைச் சாளுக்கியத்தின் வளத்தைச் கண்டு தன் நாட்டுடன் இணைக்க முயலுகிறான். விமலாதித்தனின் இரண்டாம் திருமணத்தின் காரணமாகப் பிறந்த புதல்வனை கீழைச் சாளுக்கியத்தின் அரசனாக்க ஜெயசிம்மன் முயலுகிறான். இதனால் கீழை சாளுக்கியம் தன் வசமாகும் என்று எண்ணுகிறான்.
விமலாதித்தன் உடல் நலக் குறைவால் இறக்கிறான். கீழைச் சாளுக்கியதைக் காப்பாற்ற ராஜேந்திரரின் மகன் மனுகுல கேசரி தலைமையில் சோழப் படை செல்கிறது. போரில் மனுகுல கேசரி இறக்கிறான் மற்றும் மூன்று தளபதிகள் கொல்லப்படுகிறார்கள்.
ராஜேந்திரர் தனது மகளான அம்மங்கா தேவியை நரேந்திரனுக்கு மணமுடிக்க முடிவெடுக்கிறார். இதனால் சோழ நாடும், கீழைச் சாளுக்கியமும் மேலைச் சாளுக்கியதிடமிருந்து பாதுக்கப்படும் என்று கருதுகிறார்.
அருண்மொழி பட்டன், அரையன் ராஜராஜன் இருவரையும் மேலைச் சாளுக்கியத்தை நோக்கிப் படையுடன் ராஜேந்திரர் அனுப்புகிறார். அவர்கள் ஜெயசிம்மனின் படைத்தளபதியான கங்கே யாதவின் படைகளை முறியடிக்கிறார்கள். சோழப்படை வெற்றி பெற்று முன்னேறி, வழி முழுவதும் எதிர்பட்ட மேலைச் சாளுக்கியரை அழித்து மன்யகேடத்தைக் கைப்பற்றி நிர்மூலமாக்குகின்றது. ஜெயசிம்மன் கங்கே யாதவை வடக்கிலுள்ள மனர்களிடமிருந்து ஆதரவைப் பெற அனுப்புகிறான்.
வடக்கே கங்கை வரை படையெடுத்துச் சென்று, கங்கை நீரைக் கொண்டுவந்து பெருவுடையாருக்கு அபிசேகம் செய்யவும் தனது புதிய நகரத்தில் கட்டப்பட்ட கோவிலுக்கு குடமுழுக்கு செய்யவும் அந்நகரத்தில் உள்ள ஏரியில் ஜலஸ்தம்பம் எழுப்பவும் ராஜேந்திரர் முடிவெடுக்கிறார். ஒருபுறம் தரைப்படைகள் மூலமும் மறுபுறம் தனது புதிய கடற்படை மூலமும் கிடுக்கி தாக்குதல் ஏற்படுத்தி படைகளை முன்னேற வைக்கிறார். எதிர்ப்பட்ட எல்லா படைகளையும் வென்று சோழர்படை வெற்றிவாகை சூடுகிறது. சோழர்படை வெற்றிகொண்ட அரசர்களின் மூலம் கங்கை நீரைக் கொண்டுவந்து கோவிலுக்கு குடமுழுக்கும் நடை பெறுகிறது.
கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புகிறார்கள். ராஜேந்திரர் இதானால் கோபமடைந்து ஸ்ரீ விஜயத்தின் மீது போர் தொடுக்க முடிவெடுக்கிறார். ராஜேந்திரர் வீரமாதேவி உடன் நாகைக்கு செல்கிறார் போர் கப்பல்களை வாங்க மற்றும் கைபற்ற முடிவெடுக்கிறார். இதனிடையே இடங்கை வலங்கை படை வீரர்களிடைம் பகை மேலும் வலுக்கிறது. இராஜேந்திரர் ராஜாதிராஜானை இளவரசு பட்டம் கட்டுகிறார் , அவனும் தனக்கு தனியாக சபையை உருவாக்குகிறான்.
கங்கே யாதவ் சோழ நாட்டிற்குள் புகுந்து இராஜேந்திறரை கொல்ல முயற்சித்து , அரையன் ராஜராஜனிடம் அகப்படுகிறான். அவனிடம் எல்லா பதில்களையும் பெற்றுவிட்டு அவனை கொன்று விடுகிறார். ராஜேந்திரர் அம்மங்காவை வேங்கி நாட்டிற்கு அனுப்புகிறார். அரையன் ராஜராஜனையும் அனுப்புகிறார். சோழர் படை ஸ்ரீ விஜயத்தை நோக்கி வீறு கொண்டு சென்றது