ஜி.நாகராஜன்
ஜி.நாகரரினைச் சந்தித்துப் பழகத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் தன்னைப் பிரமிக்க வைத்த அவரது ஆளுமை பற்றிய, அவரது விசித்திரமா போக்குகள் பற்றிய, அவரிடமிருந்த அற்பதமானதும் அதிசயமானதுமான ரகசிய உலகம் பற்றிய சுவாரஸ்யமான நினைவுகளைப் பதிவு செய்துள்ளார் சுந்தர ராமசாமி. காலங்கள் செல்லச் செல்ல நாகராஜனின் கோலங்கள் நசியத் தொடங்கியதை - ஹோட்டல் சர்வர்களே ஆச்சரியப்படும் விதத்தில் எக்ச்சக்கமாகச் சர்பிட்டவர், பின்னாளில் ஒரு சின்ன லட்டு சாப்பிடவே சிரமப்படும் நிலைக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டதை - துக்கம் கசியும் மனத்துடன் இந்நூலில் சுந்தர ராமசாமி நினைவுகூர்ந்துள்ளார்.