முள்ளிவாய்க்கால் 2009 மே 18 அன்று ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், இனி உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் அறிவுவழிப் போராட்டமே ஈழத்தமிழர்களின் துயர் துடைத்து, அவர்களின் உரிமைகளுக்கு வழிவகுக்கும். அதற்கு அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்க்கவேண்டியதே தமிழுணர்வாளர்களின் முதல் கடமை.