'எல்லார்க்கும் அன்புடன் என்ற இந்தப் புத்தகம் வண்ணதாசனின் தனித்தன்மையை நன்கு வெளிப்படுத்துவதாகும். நுட்பமான உணர்வுடன் அவர் பெற்ற அனுபவங்கள் கண்டு ரசித்த இனிமைகள், மனசில் தோன்றிய எண்ணங்கள் முதலியவற்றை அழகான தமிழில் வண்ணதாசன் இக்கடிதங்களில் பதிவு செய்திருக்கிறார்.