ஓணம் பண்டிகையின் நாயகன் மகாபலி சார்ந்த தொன்மத்தை அடுக்கடுக்காக அவிழ்த்துப் பார்க்கையில், தந்திரத்தால் பூமியை வென்ற வாமனனின் செயல் போன்றதுதான், ஆரியரின் குடியமர்வும் அவர்களால் அடித்தள மக்கள் அடிமைப்பட்டதும் அவலப்பட்டதும் என்பது அம்பலமாகிறது. இத்தொன்மத்தின் மறுதலைதான், வட இந்தியாவில் ராவண உருவம் கொளுத்தப்பட்டு ராம்லீலா கொண்டாடப்படுவது. இங்கே வேறொரு புள்ளியில் இணைகின்றது மகிசாசுர மர்த்தினி கதை. தசரா கர்நாடகத்து வாசிப்பு என்றால் துர்கா பூஜை வங்காளத்து வாசிப்பு.
சக்திதரனின் நன்கு ஆய்வு செய்யப்பட்டதும் தேர்ச்சிமிக்கதுமான இந்நூல், கேரளத்தின் சிக்கலான சமூகத்தை வடிவமைக்கும் நம்பிக்கையமைப்புகளை விசாரித்தறிய, தொன்மவியல்- வரலாறு, பொருளியல் – இலக்கியத்தை ஒன்றிணைக்கிறது.
No product review yet. Be the first to review this product.