தமிழில் கவிதை என்கிற உயிரியை வன்முறையின்றி லாவகமாகக் கையாளத் தெரிந்த மிகச் சிலருள் ஒருவர் இளங்கோ கிருஷ்ணன். நவீன கவிதை வெளியில் அவரது இடம் தனித்துவமானது. முந்தைய தொகுப்புகளில் இருந்து வேறுபட்டதொரு உலகை இந்தத் தொகுப்பில் முன் வைக்கிறார் இளங்கோ. பொங்கித் ததும்பும் தீவிர மனநிலையின் ஓலமும், வாழ்வின் மீது எவ்வித புகார்களுமற்ற சந்தோஷக்காரனின் சீழ்க்கையும், ரத்தம் பூசி வந்து வாசலில் நிற்கும் அன்றாடங்களின் மீதான பற்கடிப்பும், எல்லா துயரங்களின் உச்சத்திலும் பெய்திடும் மழையோசையும் அதில் வளரும் அற்புத தருவொன்றின் பசுமையும் என மொழியின் வழியே ஒரு நவீன சிம்பொனியை முயன்றிருக்கிறார். இந்தக் கவிதைத் தொகுப்பை வாசிப்பதற்காக உங்களது அலுவலகத்துக்கு ஒரு நாள் விடுப்பு எடுத்தால், ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுப்பதை ஒரு நாள் தள்ளி வைத்தால் இந்தக் கவிதைகளின் வாசகனாக நான் மகிழ்வேன்.
-வெய்யில்
No product review yet. Be the first to review this product.