நவீன இலக்கியத்திற்கும் காதலுக்கும் இடைவெளி கூடுதல் என்றொரு கற்பிதம் இங்கே நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது. காதலை எழுதினால் அது வணிக எழுத்து என்பதும் அவ்வகை சார்ந்த விமர்சனமே. தமிழ்த் திரைப்படங்கள் காட்டுகின்ற 'விசேஷமான' காதலைத் தாண்டி மனித மனங்களை இயல்பாக ஊடுருவிக் கொண்டிருக்கிற அம்சமாக காதல் இருக்கவே செய்கிறது.
1990க்குப் பிறகான தமிழ் நவீன இலக்கியச் சூழலில் தன்னுடைய இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்துள்ள எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா இந்த நூலிலுள்ள கதைகளைத் தேர்வு செய்து தொகுத்துள்ளார்.
தமிழுக்கு இது ஒரு முக்கியமான ஆவணம். அதே நேரத்தில் காதலை எழுதக்கூடாது என்கிற பிற்போக்குத்தனத்திற்கு காத்திரமான எதிர்வினையும்கூட. காதலுக்கும் காமத்திற்குமான நுண்ணிய இடைவெளியை இத்தொகுப்பிலுள்ள அனேக கதைகளில் வாசகர்கள் கண்டுணரலாம்.
No product review yet. Be the first to review this product.