இந்த நாவலில் மனித பாத்திரம் ஒன்றே ஒன்றுதான்.அந்தப் பாத்திரத்திற்கு பெயரில்லை,கிழவன் என்ற பெயர் மட்டுமே.அவன் இருப்பிடம் எந்த ஊரோ தெரியாது.கதை முழுவதும் கிழவனை சுற்றியே நடக்கிறது.இதில் முக்கிய மனித பாத்திரம் கிழவன் என்றால்,மனிதரல்லாத முக்கியபாத்திரம் தாய்ப்பன்றி.இப்படைப்பு முழுவதும் கிழவனும் தாய்பன்றியும் சம்பந்தப்பட்டதே.இதிலுள்ள மற்ற பாத்திரங்கள் விலங்குகள்,மலைகள்,மடுக்கள்,நீரோடைகள்,பள்ளத்தாக்குகள்,கல்,மண்! காடே கிழவனின் நண்பர்கள்.அபாயங்கள் அவனுக்கு வெல்லம் போல.இந்த உலகமே தன் காக்களுக்கடியில் இருப்பது போலவும்,தான் நினைத்தால் தன் கல்தூண்களைப் போன்ற கால்களால் இந்த உலகையே தூளாக்கிட முடியும் என்ற உறுதியும் அவனுடையது.தான் உண்டாக்கிய தூளில் தானுன் தூளாகிவிட்டாலும் பெரிதாக என்ன குடி முழுகிவிடும் என்னும் அலட்சியம் அவனுக்கு!
கேசவ ரெட்டி,காட்டையும் அதன் விசுவரூபத்தையும் நமக்குக் காட்டி,சிறிய கதைக்கருவுக்கு பெரிய பின்னணியைப் படைத்துத் தந்துள்ளார்.இந்தப் பின்னணியைப் படைப்பதில் மிகச்சிலரே வெற்றி கண்டுள்லனர்.கேசவ ரெட்டியும் அவர்களில் ஒருவர்.