‘அர்த்தநாரி’யை எழுதும்போது பெரும் சுதந்திர மனநிலையில் இருந்தேன்.என் மனமும் கைகளும் வெகு இயல்பாக இணைந்தன.அதன் வெளிப்பாடுகளை இதில் பரக்கக் காணலாம்.இன்றைக்கு நாம் வாழும் வாழ்வில் இத்தனை சுதந்திர மனநிலை கூடாதோ என்று இப்போது தோன்றுகின்றது.இனிமேல் இப்படி ஒரு மனநிலை கூடாதோ என்று இப்போது தோன்றுகின்றது.இனிமேல் இப்படி ஒரு மனநிலை என் வாழ்நாளில் வாய்க்கவே பெறாது என்றுதான் நினைக்கிறேன்.ஆகவே அரிதினும் அரிதான சந்தர்ப்பத்தில் உருவான நாவலாக இதைப் போற்றுகின்றது என் மனம்.