இந்தியளவில் மேதா பட்கர்,மேரி கோம்,கிரண் பேடி,ஆனந்த் டெல்டும்டெ மற்றும் தமிழகத்தின் கலை இலக்கிய சினிமா,அரசியல் ஆளுமைகளான ராமதாஸ்,திருமாவளவன்,வ.கீதா,புனித பாண்டியன்,சுப உதயகுமார்,ஆயிஷா நடராஜன்,கவிஞர் இசை,ஏ.ஆர்.ரஹ்மான்,மிஷ்கின்,பா.இரஞ்சித் மற்றும் நாடகவியலாளர் பிரளயன் உள்ளிட்டோரின் நேர்காணல்களின் தொகுப்பு நூலாக இது அமைந்துள்ளது.இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அச்சு மற்றும் இளைய இதழ்களில் வெளியாகிய காலங்களில் மிகுந்த கவனமும் மதிப்பும் பெற்றவை.