அப்பா - மகன் : சொந்த ரத்தம். ஒருவரை ஒருவர் எப்படி விரும்பாமல் இருக்க முடியும்? ஆனாலும் சில நேரங்களில் கால காட்டங்களில்,
பருவங்களில் வரும் குழப்பங்கள், சிலருக்கு ஏற்படும் வருத்தங்கள், தீராத கோபங்கள் ஆறாத பகைகள் ஏன்?
பிள்ளைக்காக தவமிருப்பவர்கள். லட்சங்களில் செலவு செய்து வைத்தியம் பார்த்துக்கொள்ளுபவர்கள் பெயர் சொல்ல ஒரு பிள்ளை,
கொள்ளிபோட பிள்ளை என்று ஆராதித்து வளர்ப்பவர்கள் பின்பு ஏன் மாறிபோகிறார்கள்! எதனால் வெறுத்துப்போகிறார்கள்! முகத்தில்கூட
விழிக்காதே என்று ஏன் விரட்டுகிறார்கள்!
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, அப்பா சொன்னால் எதையும் செய்யலாம் என்றெல்லாம் நினைக்கும் பிள்ளைகள் பின்பு அப்பா
என்றாலே நூறடி தள்ளிப்போவதேன்? தோளில் தூக்கி உலகத்தைக் காட்டிய அப்பா பின்னால் வேப்பங்காய் ஆவது எதனால்?
அம்மா மகன், அப்பா மகள் பற்றியெல்லாம் எவ்வளவோ தெரியும், ஆனால், அப்பா-மகன் என்பது அதிகம் விவாதிக்கப்படாத,
எழுதப்படாத ஒன்று. பாசம், கோபம், ஏமாற்றம், பயம், விரோதம், பகை, பழிவாங்கல், தியாகம், என்று எத்தனையோ பரிமாணங்கள்
உள்ள ஒரு முக்கியமான உறவு பற்றி சோம்.வள்ளியப்பன் பல உண்மைச் சம்பவ உதாரணங்களுடன் எழுதியிருக்கும் அற்புதமான
வாழ்வியல் புத்தகம்.