அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
பல சிறிய பெரிய ஊர்களிலிருந்து நிதம் பல்லாயிரக்கான பேர்கள் வந்து குவியும் மகா நகரமான மும்பாயின் வாழ்க்கைப் போக்குடன் கலந்திருக்கும் பெண் - ஆண் உறவுச் சிக்கல்கள், மகிழ்ச்சி, குதூகலம், ஏமாற்றம், ஏக்கம், தீராத நாட்டம், சோகம், வக்கிரம், வன்முறை இவை எல்லாம் கல்ந்த அன்றாட வாழ்க்கை ஓட்டத்தை, துப்பறியும் பெண் ஒருத்தியின் தொழில்முறை அனுபவங்கள் மூலமாகக் கூறும் மூன்று நீண்ட கதைகள்.