அறிவியலில் உச்சம் தொட்டவரல்லர்.அரசியல் தலைவராய் இருந்து ஆட்சி செய்தவர் அல்லர்.சர்வதேசத்தை ஆட்டிப் படைத்த தொழிலதிபர் அல்லர்.தத்துவ ஞானியும் அல்லர்.ஆனால் இவருடைய பெயரை உலகமே உச்சரிக்கிறது.இவரது பெயரைச் சொன்னால்,நேருப்பு ஒரு நிமிடம் குளிர்ந்து குழைகிறது.
அவர் தான் அன்னை தெரசா.
ஏழைகளோடு, ஏழையாக வாழ்ந்தார்,ஏழைகளில் பரம ஏழைகளுக்காய் உழைத்தார்.மரணவாயிலில் முனகியபடி தெருவில் கிடந்தவர்களையும் நோயாளிகளையும் அரவணைத்தார்.அவ்வளவு தான் அவர் செய்தது!ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுமளவுக்கு உடலில் வலு இருந்ததில்லை.யாரையும் எதிர்த்துப் பேச அவரது தாழ்மையான மனம் இடம் கொடுத்ததில்லை.ஆனால்,இதயத்திலோ அசாத்தியத் துணிச்சல்.
சர்வதேச தலைவர்கள் இவரது குடிசைக்குள் நுழைந்தார்.மத வேறுபாடுகளைத் தாண்டி தலைவர்கள் இவரது பணிகளை ஆதரித்தனர்.வயது வித்தியாசம் தாண்டி மக்கள் இவரது அன்புப் பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
எங்கோ பிறந்து,இந்தியத் தெருக்களில் ஒரு தியாகத் தாயாய் வாழ்ந்த அன்னையைப் பற்றி அறிந்திருப்பது மனிதத்தை நேசிக்கும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
தமிழில் வெளியான நூல்களில் அன்னையின் பணிகளையும் வாழ்க்கையையும் அவரது சமூக மதப் பின்னணியில் அலசும் நூல் இது ஒன்றே!