"அவ்வளவு பெரிய மலைகளைப்பார்க்கும் சின்ன கண்களுடன்" சஹானாவாகி விட வேண்டும். அன்றாடங்களின் வழமைகளை உதறி சஹானாவைப்போல ஒரு மீனாகி விடவேண்டும். என்றெல்லாம் தோன்றுகிறது இத்தொகுப்பை படித்தால். சூழியலுக்கும் சஹானாவுக்கும் பூனையின் மீசை அளவுக்குக்கூட இடைவெளியில்லை. எல்லாமுமாக அவள் மாறிப்போவது அற்புதமாக இருக்கிறது. நானொன்றும் தீவிர கவிதை வாசகனில்லை. ஆனால் சஹானாவின் கவிதைகள் வழியாக கேட்பது பலநேரம் ஒரு குழந்தைமையின் தூய இசைக்குரல் சிலநேரம் தேர்ந்த தாயின் மெல்லியகேவல். "ஸ்நோலின்" கவிதை சாட்சி. உண்மையில் சஹானாவின் அந்த சின்ன கண்கள் வழியாக இந்த பெரிய வாழ்க்கையை, இயற்கையை பார்க்க வேண்டும்.
- சந்தோஷ் நாராயணன்
No product review yet. Be the first to review this product.