இந்திய தேசிய ராணுவத்திர்க்காக நேதாஜி உருவாக்கிய ஆசத் வஙியில் இருந்த பணமும் சேமிப்பும் அவரது மரணத்தின் பிறகு என்னவாகின என்ற புதிர் இன்னும் தொடர்ந்துனொண்டே வருகிறது.
பலகோடி மதிப்புள்ள அந்தப் பணமும் நகைகளும் எங்கே போயின என்பதைத் தேடி அலைகிறது ஒரு வட்டம் அண்டசராசரம் என்பது அந்தப் பணமிருக்கும் இட்த்தைக் கண்டுபிடிப்பத்ற்கான ரகசிய சொல்.
நேதாஜி விட்டுச்சென்ற பணத்தைக் கண்டுபிடிப்பதற்க்காக சாத்யாகி என்ற கிழவரும்,திப்பு என்ற பதினாங்கு வயது சிறுவனும் முனைகிறார்கள், அவர்கள் இருவரின் வினோத துப்பறியும் முறைகளும், அதன் விளைவுகளும் வேடிக்கையானவை.
இந்த தேடுதலின் ஊடாக அவர்கள் இந்திய தேசிய சாணுவத்தின் பஙளிப்பு ப்ற்றியும் மதுரையியில் வாழும் முன்னாள் ஐஎன்ஏ வீரர்கள் பற்றியும் அறிந்து கொள்கிறார்கள்.
இந்திய தேசிய ராணூவம் குறித்துச் சிறார்கள் அறிந்து கொள்ளும்படியாக துப்பறியும் கதையாக எழுதப்பட்ட நாவலிது