நகரத்தில் வாழும் வளமான குடும்பங்களின் வாழ்க்கைமுறையையும் ஏழ்மைமிக்க குடும்பங்களின் வாழ்க்கைமுறையையும் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்சிப்படுத்துகிறார் கிரீஷ் கார்னாட். செல்வந்தர்கள், ஏழைகள் என்னும் நிலைகளைக் கடந்து கசப்புகள், ஏமாற்றங்கள், தந்திரங்கள், நடிப்புகள் என அனைத்தும் எல்லாருடைய ஆழத்திலும் உறைந்திருப்பதை நாடகம் சித்திரிக்கிறது. அனலில் கொதியேறும் தண்ணீர்க் குடங்களைப்போல எல்லாருமே எதோ ஒன்றைத் தேடியலைந்து நிராசைகளையும் வெறுப்புகளையும் நெருப்பெனச் சுமந்து, அந்த அனலிலேயே வெந்து வெந்து சாம்பலாகிப் போகிறார்கள். ‘இனிது இனிது நகரம் இனிது’ என்னும் குரலும் ‘கொடிது கொடிது நகரம் கொடிது’ என்னும் குரலும் இணைந்தே எங்கெங்கும் ஒலிக்கின்றன. தடைகளென இருக்கும் மரங்களை வெட்டிச் சாய்க்கிற அரசாங்கச் சட்டத்தைப்போல வாழ்க்கைச்சக்கரம் எல்லார் மீதும் ஏறி நசுக்கிக் கூழாக்கியபடி ஓடிக்கொண்டே இருக்கிறது.
No product review yet. Be the first to review this product.