அமுதே மருந்து அற்றது போற்றி உணிண்
மூன்றாண்டுகளில் ஐந்து பதிப்புகள் கண்ட ‘உணவே மருந்து’ நூலின் இரண்டாம் பாகம் இந்நூல். உடலை அன்னமய கோசம் என்று அழைக்கிறோம். இந்த அன்னமய கோசத்தைப் பாதுகாக்க முறைப்படி உண்ணுதல் என்பது அவசியமாகிறது. உடனே சாப்பிடுதல் எனும் அத்யசனம், ஆகார விதிகளை மதிக்காமல், கை, கால் கழுவாமல், காலம் தவறி பாடிக்கொண்டு, சிறித்துக்கொண்டு உண்ணும் விஷமாசனம் தவிர்க்கப்பட வேண்டும் என்று சாஸ்திரங்கள் போதிக்கின்றன. உணவுப் பொருட்களின் தனிப்பட்ட குணங்கள், சமையல் குறிப்புகள், போன்ற விவரங்கள் விரிவாகக் விளக்கப்பட்டுள்ளன. முன்னூறுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயாரிக்கும் முறைகளும் விவாக கூறப்பட்டுள்ளன.
டாக்டர் எல். மகாதேவன், காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்