தமிழ் அறிவியல் புனைகதைகளுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு.கி.பி.2000,மண்குடிசை கதைகளை மு.வரதராசன் எழுதினார்.புதுமைப்பித்தன் எழுதிய கடவுளும் கந்தசாமி பிள்ளையும்கூட ஒருவகையில் அறிவியல் புனைக்கதைதான் என்கிறார் சுஜாதா.அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பூத்த அறிவியல் கதைகளை ஒரு தொடர்ச்சிக்கு உட்படுத்தினார் சுஜாதா.அந்தத் தொடர்ச்சியைப் பாதுகாக்கும் முயற்சி இந்தச் சிறுகதைத் தொகுப்பு.